நாட்டில் கொரோனா தொற்று ஒரு வருடம் நீடிக்கும்
ஆரோக்கியமான பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று பேராசிரியர் திஸ்ஸ விதாரண(Prof. Tissa Vitharana) தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் கொரோனா பிரச்சனை இன்னும் ஒரு வருடம் நீடிக்கும், எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரச் சட்டங்களை ஆராய பாடசாலை அளவில் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த தடுப்பூசி வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தாது, ஆனால் அறிகுறிகள் தோன்றுவதையும், வைரஸ் தொற்றுக்குப் பிறகு இறப்பையும் தடுக்கிறது, என்றார்.
சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, குறைந்தது 80% மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று அவர் கூறினார்.
சுகாதாரச் சட்டங்களை கடைப்பிடிக்க மக்கள் மறந்துவிடுவதாகவும், அவ்வாறு செய்தால், மீண்டும் தொற்று தலைதூக்கும் அபாயம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.