சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!
Srilanka
Corona
Recovered
Deaths
By MKkamshan
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றால் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 10 ஆண்களும், 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர். அந்த வகையில், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 08 பேரும், 30 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களில் 07 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை15,149 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 592,128 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 567,360 ஆக அதிகரித்துள்ளது.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி