டிசம்பரில் அதிகரிக்கவுள்ள கொரோனா தொற்றாளர்கள் - விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை
corona patient
increase
december
By Sumithiran
கொரோனா தொற்று அதிகரிப்பை அடுத்து அமுல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதனால் எதிர்வரும் டிசம்பர் மாதம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உபதலைவர் எஸ்.ஏ.யு.டீ குலதிலக்க(kulatilaka) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்கும் வகையில் அமுலாகியிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றமை மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களை உரிய வகையில் மக்கள் கடைப்பிடிக்காமை என்பன காரணமாக இந் நிலை ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்தார்.
அதேநேரம் பெரும்பாலானவர்கள் கொரோனா பரிசோதனைகளைச் செய்துகொள்வதனை நிராகரித்துள்ளதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உப தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.