வடக்கு மாகாணத்தில் ஒருவாரத்தில் 106 பேரை பலியெடுத்தது கொரோனா

corona kill northern province
By Sumithiran Sep 08, 2021 08:50 AM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

வடக்கு மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் 4 ஆயிரத்து 83 கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் துறையின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதன்படி வடக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 515ஆக உயர்வடைந்துள்ளது. வடக்கு மாகாணத்தில் நேற்று செப்ரெம்பர் 7ஆம் திகதி 569 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 246 பேரும் வவுனியாவில் 160 பேரும் கிளிநொச்சியில் 99 பேரும் முல்லைத்தீவில் 39 பேரும் மன்னாரில் 31 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாகாணத்தில் நேற்றைய தினம் 22 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர். வவுனியா மாவட்டத்தில் மட்டும் 16 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் 5 பேரும் முல்லைத்தீவில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். செப்ரெம்பர் மாதத்தின் முதல் ஏழு நாள்களில் வடக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 83 கொவிட்-19 நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஆயிரத்து 724 தொற்றாளர்களும் வவுனியாவில் ஆயிரத்து 56 தொற்றாளர்களும் கிளிநொச்சியில் 889 தொற்றாளர்களும் முல்லைத்தீவில் 275 தொற்றாளர்களும் மன்னாரில் 139 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் வவுனியா மாவட்டத்தில் 45 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 43 பேரும் கிளிநொச்சியில் 9 பேரும் முல்லைத்தீவில் 8 பேரும் மன்னாரில் ஒருவரும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச் தொடக்கம் டிசெம்பர் வரை வவுனியா மாவட்டத்தில் ஒருவர் மட்டுமே கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தார். எனினும் நேற்று செப்ரெம்பர் 7ஆம் திகதிவரை 515 பேர் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஓகஸ்ட் மாதத்தில் அதிகப்படியாக 228 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகப்படியாக 303 பேரும் வவுனியா மாவட்டத்தில் 119 பேரும் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சியில் 45 பேரும் முல்லைத்தீவில் 28 பேரும் மன்னாரில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர். வடக்கு மாகாணத்தில் நேற்றுவரை 30 ஆயிரத்து 912 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 474 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 635 பேரும் வவுனியா மாவட்டத்தில் 5 ஆயிரத்து 788 பேரும் முல்லைத்தீவில் 2 ஆயிரத்து 192 பேரும் மன்னாரில் ஆயிரத்து 823 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ReeCha
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026