தற்கொலைக்கு முயற்சித்த கொரோனா நோயாளி!
sri lanka
vavuniya
people
By Shalini
வவுனியாவில் கொரோனா தொற்று சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கம்பஹா மாவட்டத்தினை சேர்ந்த 63 வயதுடைய முதியவர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியா கண்டி வீதியில் அமைந்துள்ள கொரோனா தொற்று சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த நபர் நேற்று (01) மாலை தற்கொலை முயற்சிக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் தற்கொலை செய்ய முயற்சித்தமைக்கான காரணயம் தெரியவராத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி