கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
விடுமுறை நாட்களில் மக்கள் நடந்துகொண்ட விதமே பாதகமான விளைவுகளுக்குக் காரணம் என சுகாதார அமைச்சின் கொரோனா வைரஸ் பரவல் செயற்பாடுகளின் பிரதான தொடர்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.
எனினும் சரியான முடிவுகளை இன்னும் இரண்டு வாரங்களில் எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்காகவே நாடு திறக்கப்பட்டுள்ளது. உல்லாசப் பயணங்களுக்குச் செல்வதற்காக அல்ல. நாட்டில் கொரோனா பரவல் தொற்றாளர்களின் எண்ணிக்கை வைத்தியசாலைகளில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 5 முதல் 7 நிமிடத்தில் 100இற்கு உயர்ந்துள்ளது. இது தொற்றார்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.
சுகாதாரச் சட்டங்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், கொரோனா பரவல் அதிகரித்து, கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடையக் கூடும்.
எதிர்காலத்தில் வைரஸ் பரவுவதைப் பொறுத்து, சில பிரதேசங்கள் அல்லது பகுதிகள் மட்டுமே முடக்க வேண்டும் என்றார்.