மற்றுமொரு கொரோனா நோயாளி தப்பியோட்டம்
corona
escape
patient
By Sumithiran
தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இந்த தகவலை பொலிஸ் சேப்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்தார்.
அம்பாறையை சேர்ந்த முகமட் ரிகாஸ் என்பவரே தப்பிச்சென்றுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறித்த நபர் குறித்த தகவல்களை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வழங்குமாறு பொதுமக்களை பொலிஸ் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை கொவிட்டினால் பாதிக்கப்பட்ட
பூசா சிறைச்சாலையை சேர்ந்த கைதியொருவர் சிகிச்சை நிலையமொன்றிற்கு அழைத்துச்செல்லப்படும் வேளை தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்