கனடாவின் பிரதமருக்கு கொரோனா
covid
corona
canada
justin Trudeau
By Vanan
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு (Justin Trudeau) கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தவகலை அவரும் தனது கீச்சக (Tweet) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் அனைவரையும் “தயவுசெய்து தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஊக்கப்படுத்துங்கள்’’ என வலியுறுத்தியுள்ளார்.
கொவிட் தொற்றுறுதியான ஒருவருடன் அவர் தொடர்பில் இருந்ததையடுத்து, ஐந்து நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு இன்று (31) கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
This morning, I tested positive for COVID-19. I’m feeling fine – and I’ll continue to work remotely this week while following public health guidelines. Everyone, please get vaccinated and get boosted.
— Justin Trudeau (@JustinTrudeau) January 31, 2022
