அம்பாறையில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்த சுகாதார பணிப்பாளர்
Eastern Province
Amparai
Corona Vaccine
By Vasanth
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையில் முதலில் சுகாதார பணியாளர்களுக்கு கொவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் ஆரம்பித்து வைத்திருந்தார் .
கல்முனை சுகாதார சேவைகள் பணிமனை உட்பட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் கடமை புரியும் வைத்தியர்கள் சுகாதார ஊழியர்களுக்குமாக மொத்தம் 4870 தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.


4ம் ஆண்டு நினைவஞ்சலி