முடக்கப்பட்ட யாழ்.மத்திய பகுதி! வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட இ.போ.ச சேவைகள்
srilanka
coronavirus
By Vasanth
யாழ்ப்பாணத்தின் மத்திய பகுதி முடக்கப்பட்டுள்ள நிலையில் இ.போ.ச சேவைகளை வீரசிங்கம் மண்டபம் முன்பாக இருந்து எதிர்வரும் 10 நாட்களுக்கு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில்கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து மாநகரின் ஒரு பகுதி முடக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து சேவைகளை நகரின் மத்தியிலிருந்து வேறிடம் மாற்றவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் நகரின் மத்தியிலிருந்து வெளியேற இ.போ.ச. எதிர்ப்பு வெளியிட்டது.
எனினும் மாவட்ட கொவிட்-19 கட்டுப்பாட்டு செயலணியின் தீர்மானத்தை மீற முடியாத நிலையில் இ.போ.ச. பேருந்துகள் அடுத்த 10 நாட்களுக்கு வீரசிங்கம் மண்டபம் முன்பாக இருந்து சேவையில் ஈடுபடவுள்ளதுடன் தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்த சேவையில் ஈடுபடவுள்ளன.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்