அதிகரிக்கும் வெளிநாட்டு தபால் வருமானம் இலங்கை தபால் திணைக்களம் வெளியிட்ட தகவல்
இலங்கை தபால் திணைக்களத்தின் ஊடாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் தபால் பொருட்களின் தொகையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தபால் திணைக்களத்தின் ஊடாக அனுப்பப்படும் பொருட்களில் அதிகரிப்பு காரணமாக அதற்கேற்ப வருமானம் அதிகரித்துள்ளதாகவும் பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.
மேலும், அதனுடன் ஒப்பிடும் போது தனியார் தூதஞ்சல் (Courier) நிறுவனங்களின் தபால் கட்டணமும் அதிக விலைக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
கட்டண அதிகரிப்பு

கடந்த ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வெளிநாட்டு தபால் கட்டணத்தை அதிகரிக்க தபால் திணைக்களம் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணத்தால் இவ்அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் தபால் பொருட்கள் குறைந்துள்ளதாக ராஜித ரணசிங்க தெரிவித்தார்.