யாழில் பண மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள நபரின் சொத்துக்கள் முடக்கம்
யாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியில் வசிக்கும் நபரொருவர் வெளிநாட்டு ஆசைகாட்டி பெருந்தொகை மோசடியில் ஈடுபட்டுத் தலைமறைவாகியுள்ள நிலையில், அவருக்குச் சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த நபர் வெளிநாட்டில் வேலைபெற்றுத் தருவதாகக்கூறி பல லட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளார்.
அவருக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், அந்த நபர் தனது வசிப்பிடத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார்.
திறந்த பிடியாணை
இதையடுத்து குறித்த நபருக்கு எதிராக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் தற்போதுவரை அவர் அவர் காவல் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ முன்னிலையாகவில்லை. இதையடுத்தே குறித்த நபரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அரசுடமையாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |