குட்டிமணி தங்கத்துரை சிலை நிறுவுவதற்கு நீதிமன்றம் தற்காலிக தடை!
1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரது உருவச்சிலை நிறுவுவதற்று நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது.
குட்டிமணி மற்றும் தங்கத்துரையின் 43-வது நினைவு நாளை ஒட்டி எதிர்வரும் 25.7.2026 அன்று உருவச்சிலை நிறுவுவதற்கு ஏற்பாடுகள் முக்னெடுக்கப்பட்டு இருந்தன.
எனினும் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் அதன் சிலை நிறுஉனர்களில் ஒருவரான சதீஷ் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தின் தற்காலிக தடை
இதற்கமைய அவர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தின் முற்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது.

இந்திலையில் குறித்த வழக்கு இன்று பருத்தித்துறை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, விஸ்வலிங்கம் மணிவண்ணன் உட்பட பலர் பிரதிவாதி சார்பில் முன்னிலையாகி இருந்தனர்.
இதன்போது முன்வைக்கபட்ட கருத்துக்களை பரிசீலித்த பருத்தித்துறை நீதவான் எதிர்வரும் 04.08.2026 வரை குறித்த சிலை நிறுவுவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கான கட்டளையை பிறப்பித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 1 மணி நேரம் முன்