மைத்திரி உள்ளிட்ட சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு
மகிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க (SLFP Members) ஆகியோரை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஆட்சேபனைகளை முன்வைக்க அனுமதிக்குமாறு பிரதிவாதி கோரியுள்ளார்.
வழக்குத் தாக்கல்
அதன்படி, ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம், வரும் 15 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், நீதியான விசாரணையின்றி தம்மை பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் எடுத்த தீர்மானத்தை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி அமைச்சர்கள் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |