கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள பண்டாரநாயக்கா சிலை அருகே பொதுமக்கள் கூடுவதற்கு தடை!
Colombo
Ranil Wickremesinghe
Sri Lankan protests
By Kiruththikan
பண்டாரநாயக்கா சிலை
எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கா சிலை அருகே பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள பண்டாரநாயக்கா சிலையின் 50 மீட்டர் சுற்றளவுக்கு மக்கள் கூடுவதைத் தடுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான நீதிமன்ற உத்தரவை கொழும்பு கோட்டை நீதவான் இன்று பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்றை சுற்றி இருக்கும் பகுதிகளில் போராட்டம்

சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் இன்று பதவியேற்றத்தை தொடர்ந்து இன்று நாடாளுமன்றை சுற்றி இருக்கும் பகுதிகளில் காலி முகத்திடல் போராட்டகாரர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையிலேயே பண்டாரநாயக்கா சிலையின் 50 மீட்டர் சுற்றளவுக்கு மக்கள் கூடுவதைத் தவிர்க்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி