ஈஸ்டர் தாக்குதல் : குண்டுதாரியின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் : நீதிமன்றின் உத்தரவு

CID - Sri Lanka Police Sri Lanka Magistrate Court Easter Attack Sri Lanka Gold
By Jaso Feb 25, 2026 03:10 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இரண்டாவது சந்தேகநபரான இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பவரது வீட்டிலிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் இரத்தினக்கற்கள் உள்ளிட்ட சொத்துக்களை, அவரது சகோதரரான இஃப்லால் அஹமட்டிடம் ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (25) குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார். \

 முன்னைய நீதவான் இந்தச் சொத்துக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய சி.ஐ.டி-க்கு போதுமான அவகாசம் வழங்கியிருந்தும், அவர்கள் அதனைச் செய்யத் தவறியுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

 இந்த உத்தரவை ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தாவிடில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதவான் எச்சரித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் : குண்டுதாரியின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் : நீதிமன்றின் உத்தரவு | Court Orders Gold Seized From Bombers House

 ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் மற்றும் தெமட்டகொட வீட்டில் குண்டு வெடித்ததில் உயிரிழந்த இன்ஷாப் அஹமட் ஆகியோரின் சகோதரரான இஃப்லால் அஹமட், குறித்த சொத்துக்கள் தனக்குச் சொந்தமானவை எனக் கூறி அவற்றை விடுவிக்குமாறு சட்டத்தரணி ஊடாகக் கோரியிருந்தார்.

 மத்திய வங்கியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன

தற்போது அந்தப் பொருட்கள் மத்திய வங்கியின் பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அவற்றை விடுவிக்க மேலதிக அவகாசம் கோரியதுடன், இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

ஈஸ்டர் தாக்குதல் : குண்டுதாரியின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் : நீதிமன்றின் உத்தரவு | Court Orders Gold Seized From Bombers House

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடுவது தவறான செயலாகும் என நீதவான் வலியுறுத்தினார்.

 நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தவறுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றமாகும் எனத் தெரிவித்த அவர், எக்காரணம் கொண்டும் ஒரு வாரத்திற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், ஏ.எச்.எம். ரிஃபாஸ் மற்றும் மொஹமட் நிலாம் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

ரஷ்ய தலைநகரில் தற்கொலைத்தாக்குதல் காவல்துறை அதிகாரி உட்பட இருவர் பலி

ரஷ்ய தலைநகரில் தற்கொலைத்தாக்குதல் காவல்துறை அதிகாரி உட்பட இருவர் பலி

பிரித்தானிய எல்லைகளில் புதிய விதிகள்: இன்று முதல் கட்டாயமாகும் நடைமுறை

பிரித்தானிய எல்லைகளில் புதிய விதிகள்: இன்று முதல் கட்டாயமாகும் நடைமுறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026