வேகமாக பரவும் கொரோனா - வைத்தியசாலை கட்டமைப்பில் ஏற்படவுள்ள அபாய நிலை
hospital
srilanka
covid 19
base
By Vasanth
தற்போது நாட்டில் சுகாதார பணியாளர்கள் மத்தியில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பிரிவுகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் வைத்தியசாலை கட்டமைப்பு வீழ்ச்சியடையும் அபாய கட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தாதியர் சங்கமே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. வைத்தியசாலை கட்டமைப்பு வீழ்ச்சியடைய தாதியர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாமையும் காரணமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வாறான குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது
4ம் ஆண்டு நினைவஞ்சலி