வடக்கில் மேலும் 80 பேருக்கு கொரோனா
srilanka
covid-19
northern province
By Vasanth
வடக்கு மாகாணத்தில் மேலும் 80 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் 66 பேர் யாழ்ப்பாணம் மாநகர மத்தி நவீன சந்தைப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆகிய ஆய்வுகூடங்களில் 677 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 80 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.