இலங்கையில் மேலும் 336 பேருக்கு கொரோனா - 894 பேர் பூரண குணமடைவு
srilanka
covid-19
patient
By Vasanth
இலங்கையில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொவிட் தொற்றுக்கான 894 பேர் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளனர்.
இந்த நிலையில் இதுவரை 61,461 பேர் பூரணமாக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொவிட் தொற்றால் நாட்டில் இதுவரை 339 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4ம் ஆண்டு நினைவஞ்சலி