‘கொவிட்’தொடர்பான அரசின் தகவல்கள் பொய் -அம்பலப்படுத்திய எம்.பி
srilanka
covid-19
patient
By Vasanth
கொவிட் தொற்று தொடர்பான உண்மைத் தகவல்களை அரசாங்கம் மூடி மறைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது கொவிட் தொற்று நிலைமை தொடர்பாக வழங்கப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. மரணங்கள் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கைகள் தொடர்பாகவும், சிகிச்சை பெற்று வரும் நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்பாகவும் கூறுவதும் பொய்யாகும்.
நாளாந்தம் சுமார் 800 பேர் வரையிலான நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி