இலங்கையின் கொவிட் பலி 2,425ஆக அதிகரிப்பு
covid
sri lanka
death
By Vanan
நேற்றைய தினத்தில் (16) மாத்திரம் நாட்டில் 51 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இன்றைய தினத்தில் மாத்திரம் 2,361 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 233,053 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 195,434 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி