சிறார்களை அச்சுறுத்தும் கொவிட், டெங்கு!! அவதானமாக இருக்குமாறு ஆலோசனை
சிறுவர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகும் வீதம் அதிகரித்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஹசித லியனாராச்சி (Hasitha Lianarachchi) தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர், ஆரோக்கியமான சிறுவர்களுக்கு கொவிட் தொற்றினால் பாரிய ஆபத்துக்கள் இல்லை என்ற போதிலும், நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் அது மரணம் வரை செல்லும் என எச்சரித்துள்ளார்.
மேலும் கருத்துரைத்த அவர்,
''தற்போது 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தடுப்பூசி வழங்கப்படாத வயது மட்டத்திலுள்ள சிறுவர்களுக்கு சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதன் அவசியம் குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.
அத்தோடு சிறார்களுக்கு வழமைக்கு மாறாக ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும்.
கொவிட் தொற்றுக்கு அப்பால், அண்மை காலமாக டெங்கு நோயுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவுள்ளது.
இவர்களில் பெருமளவானோர் டெங்கு மற்றும் கொவிட் ஆகிய இரு நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்களாகவுள்ளனர்.
எனவே பெற்றோர் டெங்கு நோய் குறித்தும் அவதானத்துடன் செயற்பட வேண்டும்'' என்றார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்