யாழில் நகரசபை நூலகத்தில் பசுவை இறைச்சியாக்கிய கொடூரம் : மூவர் கைது

Sri Lanka Police Jaffna Law and Order
By Shalini Balachandran Nov 29, 2024 10:16 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

யாழில் (Jaffna) மேச்சலுக்காக கட்டப்பட்ட பசு மாட்டைத் திருடி இறைச்சியாக்கி விற்பனை செய்த பொதுநூலக ஊழியர் உட்பட்ட இருவர் அப்பகுதி இளைஞர்களால் பிடிக்கப்பட்டு சாவகச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது சாவகச்சேரி நகரசபையின் நுணாவில் பொது நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த புதன்கிழமை நுணாவில் பொதுநூலகத்திற்கு அருகில் உள்ள காணியில் மேய்ச்சலுக்காக கட்டப்பட்ட பசுமாடு காணமல் போயுள்ளது.

பாரிஸில் ஆரம்பமான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு

பாரிஸில் ஆரம்பமான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு

பசுவின் உரிமையாளர் 

இந்தநிலையில், பசுவின் உரிமையாளரும் அப்பகுதி இளைஞர்களும் இன்று பகல் தேடுதல் நடத்திய போது நூலக மதிலுக்கு அருகில் பசுமாட்டின் தலை உட்பட்ட பாகங்களைக் கண்டுள்ளனர்.

யாழில் நகரசபை நூலகத்தில் பசுவை இறைச்சியாக்கிய கொடூரம் : மூவர் கைது | Cow Slaughter Incident In Jaffna

இதையடுத்து நூலகத்துக்குள் நுழைந்து பார்த்த பொழுது நூலக குளியலறைக்குள் வைத்து பசுவினை இறைச்சியாக்கிய இரத்தக்கறைகளைக் கண்டுள்ளனர்.

இதனால் நூலக ஊழியர் மீது சந்தேகமடைந்த இளைஞர்கள் ஊழியரை விசாரித்த பொழுது இன்னொருவருடன் இணைந்து புதன்கிழமை கடமை நேரத்தில் மதியம் 1.00 மணியளவில் பசுவினை இறைச்சியாக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

பங்களாதேஷில் இந்து கோயில்கள் மீது மீண்டும் தாக்குல்கள் : தொடரும் சர்ச்சை

பங்களாதேஷில் இந்து கோயில்கள் மீது மீண்டும் தாக்குல்கள் : தொடரும் சர்ச்சை

காவல்துறையினரிடம் முறைப்பாடு

இதையடுத்து மற்றையவரையும் பிடித்த இளைஞர்கள் நூலகத்தை உடனடியாகவே மூடி சாவகச்சேரி காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்து இருவரையும் ஒப்படைத்துள்ளனர்.

யாழில் நகரசபை நூலகத்தில் பசுவை இறைச்சியாக்கிய கொடூரம் : மூவர் கைது | Cow Slaughter Incident In Jaffna

இருவரையும் கைது செய்த காவல்துறையினர் நாளைய தினம் (30) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

மேலும், சாவகச்சேரி நகரசபை நூலக ஊழியர் பசுமாட்டைத் திருடி இறைச்சியாக்கி காவல்துறையினாரால் கைது செய்யப்பட்ட விடயம் வெளியில் தெரிந்தால் நகரசபையின் பெயருக்கு அவதூறு ஏற்படும் என தெரிவித்து இளைஞர்களோடு சமரச முயற்சியில் நகரசபை அதிகாரிகள் சிலர் ஈடுபட்ட போதும் இளைஞர்கள் அதற்கு சம்மதிக்காமல் இப்படியான ஊழியர்கள் பணியில் இருந்து நிரந்தரமாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரவில் மன அழுத்தத்தால் அவதியா : இலகுவில் வெளியில் வர நிரந்தர தீர்வு

இரவில் மன அழுத்தத்தால் அவதியா : இலகுவில் வெளியில் வர நிரந்தர தீர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023