அரச வேலைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி செய்தி
அரச சேவைக்கு 72,000 புதிய ஊழியர்களை இணைத்துக் கொள்ள உள்ளதாக பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அரச சேவைக்கான நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் முறையான தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்படாததால் அரச சேவையின் தரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்..
புதிய ஊழியர்களை அரச சேவை
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பிரதான நிர்வாக இயந்திரமாக விளங்கும் அரச சேவையை மீண்டும் வலுப்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பு என்றும் அரச ஊழியர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் சுமார் 76,000 புதிய ஊழியர்களை அரச சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இனிவரும் காலங்களில் அரச ஊழியர்களின் இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் மற்றும் பாடசாலை அனுமதி உள்ளிட்ட விடயங்கள் அரசியல் தலையீடுகளின்றி முறையான பொறிமுறையின் ஊடாக முன்னெடுக்கப்படும் எனவும் நலின் ஹேவகே உறுதியளித்தார்.
தவறான நடைமுறைகள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் மாத்திரமே அரசாங்கம் தலையிடும் எனக் குறிப்பிட்ட அவர் அரச ஊழியர்கள் தங்களது திறமை மற்றும் தகுதிகளின் அடிப்படையில் மதிப்பளிக்கப்பட்டு நாட்டின் அபிவிருத்திக்கு நேர்மையுடன் பங்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |