யாழில் அதிகரித்துள்ள வெப்பநிலை: சூடு பிடிக்கும் வெள்ளரிப்பழ விற்பனை
நாட்டில் அதிகரித்துள்ள வெப்பநிலையை கருத்திற்கொண்டு உடலின் வெப்பத்தை குறைத்து குளிர்மையினை எற்படுத்தும் வெள்ளரிப்பழம் யாழில் தற்போது மும்முரமாக விற்பனையாகி வருகின்றது.
அதன்படி திருநெல்வேலி(Tirunelveli), யாழ்ப்பாண(jaffna) நகர சந்தைப்பகுதிகளுக்கு அருகாமையில் வெள்ளரிப்பழத்தினை வியாபாரிகளிடம் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்துவருகின்றனர்.
வெள்ளரிப்பழ விற்பனை
இந்த நிலையில், ஒரு வெள்ளாரிப் பழத்தின் விலை ரூபா 300 முதல் 450 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து வெப்பப் பக்கவாதம் (ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் (Jaffna Teaching Hospital) பொது வைத்திய நிபுணர் வைத்தியர் ரி.பேரானந்தராஜா (Dr. T. Peranandaraja) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த நோய் வராமல் இருப்பதற்கு வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய நீர் ஆகாரங்களை வழங்கவேண்டும்.
தர்பூசணி, வெள்ளரிப்பழம், தோடம்பழம் போன்ற பழங்களை கூடுதலாக உண்ணக் கொடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |