எச்.ஐ.வி தொற்றாளர்களுக்கான புதிய சிகிச்சை முறை
எச்.ஐ.வி தொற்றாளர்களுக்காக, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் "Prep" என்ற புதிய சிகிச்சை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் உள்ள தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு கிளினிக்குகளில் இந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அதன் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன புதிய சிகிச்சை முறை குறித்து கருத்துத் தெரிவிக்கையில்,
புதிய எச்ஐவி தொற்றுகள்

“ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் நாங்கள் தரவுகளை சேகரித்து சோதனை செய்கிறோம்.
ஆனால் 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில், புதிய எச்ஐவி தொற்றுகள் 48% அதிகரித்துள்ளன.
அதற்குக் காரணம், 2021ல், கோவிட் பிரச்சினையால் பலர் சோதனைக்கு வராமையே ஆகும்.
அந்த 2023 முதல் காலாண்டில் 165 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளதோடு, பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள்” என்றார்.