டொலரின் பெறுமதியில் மாற்றம் இல்லை! இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்
srilanka
dollar
cbsl
currency exchange rates
By Kanna
மத்திய வங்கியின் இன்றைய அறிக்கையின் படி கடந்த மூன்று நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மாறாதுள்ளது.
இதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை மாற்றமின்றி 298.99 ரூபாவாக உள்ளது.
ஸ்டெர்லிங் பவுணின் மதிப்பும் மாறாமல், அதன் விற்பனை விலை 393.27 ரூபாவாக உள்ளது. இருப்பினும், அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள் மற்றும் யூரோவுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சற்று குறைந்துள்ளது.
இதன்படி, அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை விலை 226.43 ரூபாவாகவும் கனேடிய டொலரின் விற்பனை விலை 241.12 ரூபாவாகவும் மற்றும் யூரோவின் விற்பனை விலை 335.04 ரூபாவாகவும் காணப்படுகிறது.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி