கறிவேப்பிலை - வெந்தயம் போதும்: கொட்டும் கூந்தலை அடர்த்தியாக்கும் எண்ணெய்
Hair Growth
Beauty
Life Style
By Shalini Balachandran
அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.
ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.
இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
🛑 தேவையான பொருட்கள்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி
- வெந்தயம்- 2 ஸ்பூன்
- தண்ணீர்- 2 கப்
- சீகைக்காய் பொடி- 4 ஸ்பூன்

🛑 பயன்படுத்தும் முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவும்.
- பின் இதில் கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்து நன்கு நிறம் மாறி வரும் வரை கொதிக்கவைக்கவும்.
- அடுத்து இதனை நன்கு ஆறவைத்து ஒரு கிண்ணத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
- இதற்கடுத்து இதில் சீகைக்காய் பொடி சேர்த்து கட்டியில்லாமல் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
- பின்னர் இதனை குளிக்கும்போது ஷாம்பூவிற்கு பதிலாக இதனை தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
- இந்த கலவையை தொடர்ந்து தலைமுடிக்கு பயன்படுத்தி வர முடி உதிர்வு நிரந்தரமாக நின்று முடி நன்கு வளர்ச்சியடையும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்