இலவசமாக வழங்கப்பட்ட மடிக்கணனிகளுக்கு பெருந்தொகை வரி விதித்த சுங்கத்துறை
இலங்கை மாணவர்களுக்காக அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் அன்பளிப்பு செய்த மடிக்கணனிகளுக்கு சுங்கத்துறையால் ரூபா 2.2 மில்லியன் வரி விதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க (Ranjan Ramanayake)தெரிவித்துள்ளார்.
நன்கொடையாக வழங்கப்படும் மடிக்கணனிகளுக்கு இதுபோன்ற வரி விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அவர்கூறினார்.
முன்னர் ஒருபோதும் செலுத்தியதில்லை
“நாங்கள் சுங்க வரியாக ரூ 2,286,000 செலுத்தியுள்ளோம் அதற்கு 18% வரி காரணமாக இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நன்கொடையாக வழங்கப்படும் மடிக்கணனிகளுக்கு இதற்கு முன்னர் நாம் வரி செலுத்தியதில்லை'' என்றார்.

200க்கும் மேற்பட்ட மடிக்கணனிகள்
இலங்கை மாணவர்களுக்கு 200க்கும் மேற்பட்ட மடிக்கணனிகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரஞ்சன் ராமநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரஞ்சன் ராமநாயக்க அறக்கட்டளை நடாத்தும் நிகழ்வு நேற்று(23) கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.
ரஞ்சன் ராமநாயக்க அறக்கட்டளையின் இலவச மடிக்கணினி நன்கொடை அமெரிக்காவில் வசிக்கும் இந்து ஹேரத்தின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |