இலங்கையை உலுக்கிய டித்வா புயல் : 100 பாடசாலைகளுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
இலங்கையில் உருவான டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 100 பாடசாலைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை கல்வி அமைச்சு (Ministry of Education) தெரிவித்துள்ளது.
குறித்த பாடசாலைகளில் பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளதுடன், சில பாடசாலைகள் தொடர்ந்தும், பாதிக்கப்பட்ட மக்களை தங்கவைத்துள்ள முகாம்களாக செயற்படுகின்றதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர்
இந்த நிலையில், குறித்த பாடசாலைகளில் கல்வி கற்ற மாணவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளுக்கு செல்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும், அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதில் ஏதேனும் சிக்கல்கள் காணப்படுமாயின், அது குறித்தும் ஆராய்வதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ (Nalaka Kaluwewe) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |