தீவிரமடைந்துள்ள மொந்தா புயல்! இந்திய மக்களுக்கு எச்சரிக்கை
மொந்தா புயல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூவாயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் தீவிரப் புயலாக மாறியுள்ள மொந்தா புயல், இன்று (28.10.2025) வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது.
இந்தப் புயலானது இன்று மாலை அல்லது இரவு ஆந்திரத்தின் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை
இந்நிலையில் தெற்கு ஒடிசாவில், சுமார் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, 1,445 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் 32,528 பேரை வெளியேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்