டளசுக்கு நம்பிக்கை துரோகம்! ரணிலுக்கு வாக்கு! தமிழ் கறுப்புகளின் ரகசிய நகர்வுகள்
தமிழ் கறுப்புகளின் ரகசிய நகர்வுகள்
சிறிலங்கா பொதுஜன பெருமனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பதாக கூறிய பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களித்த விடயம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
டளஸ் அழகப்பெருமவின் தோல்விக்கு இத்தகைய நம்பிக்கை துரோகமே முக்கிய காரணியாக அமைந்திருப்பதாக துறைசார் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதில் சில தமிழ் பேசும் மக்கள் பிரதிநிதிகளும் ரகசியமாக நகர்ந்துள்ளதாக தெரிய வருகிறது. ஏனென்றால் எதிர்பார்க்கப்பட்டதை விட ரணில் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கிறார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ரணிலுக்கு ஆதரவு
இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ரணிலுக்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் வெளிப்படுகின்றன.
குறிப்பாக ரணில் அணியில் இருக்கும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இது குறித்த தகவலை பகிரங்கமாக நேற்றைய தினம் கூறியிருந்தார்.
இதன் மேலதிக மற்றும் இலங்கை, இந்தியா, உலக நடப்புக்களை இன்றைய செய்திவீச்சில் காணலாம்,
