சேதமாக்கப்பட்ட தாமரை கோபுரம் - நெலும் குளுன நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்களில் சிலர் அதன் சொத்துக்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துவதாக அதன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு நெலும் குளுன தனியார் நிறுவனத்தின் விற்பனை நிறைவேற்று அதிகாரி பிம்சரா ரொசைரோ இதனை தெரிவித்தார்.
மேலும், பொதுமக்களின் பணத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்தச் சொத்தை பாதுகாப்பது மக்களின் பொறுப்பு என நெலும் குளுன தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல இடங்களில் கீறல்கள்
மேலும் அவர் தெரிவிக்கையில், "இவை எங்களின் சொந்தப் பணத்தில் உருவாக்கப்பட்டவை. எனவே இதைப் பார்க்க வரும்போது அழிக்க வேண்டாம்.
பல இடங்களில் கீறல்கள் காணப்படுகின்றது. அதில் வெவ்வேறு பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுக்க எங்களுக்கு நிறைய பணம் செலவாகும்.
என இந்த இடங்களை சேதப்படுத்திய பலரை நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இனிமேல் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம்.
இது மக்களுக்கானது
நேற்று (13) இவ்வாறான செயல்களைச் செய்த மூவரை அடையாளம் கண்டோம். அவர்களை இங்குள்ள காவல் பிரிவில் ஒப்படைத்தோம்.
தாமரைக் கோபுரத்திற்கு வாருங்கள். அதன் அழகைப் பாருங்கள். மகிழுங்கள். ஆனால் அதை அழிக்காதீர்கள். இது மக்களுக்கானது."என தெரிவித்துள்ளனர்.


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்