டேன் பிரியசாத் படுகொலை: இருவருக்கு நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு
டேன் பிரியசாத் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவருக்கும் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
டேன் பிரியசாத் படுகொலை தொடர்பான உண்மைகளை வெல்லம்பிட்டிய காவல்துறையினர் இன்று (23) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.
இந்தக் குற்றத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தைக்கும் மகனுக்கும் இடையேயான தொடர்பைக் குறிக்கும் தகவல்கள் விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தடை உத்தரவு
அதன்படி, பந்துல பியால் மற்றும் மாதவ சுதர்ஷன என்ற சந்தேகநபர்களை வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும், அவர்களின் தொலைபேசி பதிவுகளை வரவழைக்க உத்தரவைப் பிறப்பிக்குமாறும் காவல்துறையினர் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.
அதனை தொடர்ந்து, காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்ற மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனாவல, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து, இருவரும் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்துள்ளார்.
நேரில் விசாரணை
இறந்த டேன் பிரியசாத்தின் சகோதரரான திலின பிரசாத் பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிக் கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பாக தந்தை மற்றும் மகன் மீது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த சம்பவம் தொடர்பாக சுமார் 10 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இந்த நிலையில், கொலை நடந்த இடத்திற்கு நீதவான் நேரில் சென்று சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
