ஜேர்மனிக்கு மாணவர்களை அனுப்புவதாக நடன ஆசிரியையின் பெரும் பண மோசடி அம்பலம்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Sumithiran
தன்னிடம் பயிலும் நடனக் குழுவின் மாணவர்களை ஜேர்மனிக்கு அனுப்பப் போவதாகக் கூறி பெற்றோரிடம் பணம் பெற்ற குற்றச்சாட்டில் கம்பஹா சர்வதேச பாடசாலை ஒன்றின் நடனப் பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டதாக கம்பஹா காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த ஆசிரியைக்கு இலட்சக்கணக்கான பணம் வழங்கியமை தொடர்பில் தமக்கு நான்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் சுமார் 50 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பெற்றோரிடம் பணம் பெற்ற ஆசிரியை

49 வயதுடைய இந்த பெண் மாணவர்களின் பெற்றோரிடம் இருந்து ஐந்து அல்லது ஆறு இலட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி