இலங்கை மீது மரண அடியாக மாறப்போகும் ஆபத்து!

srilanka india china economy crisis peoples
By S P Thas Jan 10, 2022 12:46 PM GMT
Report

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றால், அது இலங்கை மீள முடியாத பொருளாதாரத்தின் மீதான மரண அடியாக இருக்கும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைப் பிரிவின் பேராசிரியர் ஆனந்த எச்சரித்துள்ளார்.

கண்டியில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

“2022 ஆம் ஆண்டு மொத்தமாக 7 ஆயிரம் மில்லியன் டொலர் கடனை செலுத்த வேண்டியுள்ளது. ஜனவரி மாதத்தில் மாத்திரம் 699 மில்லியன் டொலர்களை செலுத்த வேண்டும். இந்த கடன் செலுத்துதலை பிற்போட முடியாது. இதன் காரணமாக சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லுமாறு பலர் ஆலோசனை வழங்கி வருகின்றனர். எனினும் அரசாங்கம் தற்போதும் சீனாவிடமே கடனை பெற்று வருகிறது.

சீனாவிடம் பெறப்படும் கடன் நிதியை பயன்படுத்தி, அந்நாட்டிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது நாட்டின் சொத்து ஒன்றை எழுதிக்கொடுக்க வேண்டும். இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை பெற போகின்றனர். இந்த பணத்தில் மூலம் இந்தியாவில் இருந்து 500 சிறிய பேருந்துகள் மற்றும் பொலிஸாருக்கு தேவையான 750 ஜீப் வண்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கு இவை தேவையா?. இது நாட்டு மக்களை வாழ வைக்க வேண்டிய நேரம். நாடு தற்போது ஏல விற்பனை நிலையம் போல் காணப்படுகிறது. இவ்வாறான நிலைமையில் எமக்கு சில மாற்று வழிகள் உள்ளன. பிணை முறி கடன்களை பெற்றுள்ள நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவற்றை செலுத்துவதற்கு சிறிய காலத்தை அவகாசமாக கோரலாம். அதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும்.

எமக்கு நெருக்கமான நாடுகள் அப்படியில்லை என்றால், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி அல்லது வேறு சர்வதேச நிறுவனங்களிடம் நிவாரண முறையின் கீழ் கடனை பெற வேண்டும். எனினும் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லுமாறு இந்த நிறுவனங்கள் கூறுகின்றன. சர்வதேச நாணய நிதியத்தை கண்டு ஏன் அரசாங்கம் இந்தளவுக்கு பயப்படுகிறது என்று புரியவில்லை. ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவே அந்த நிறுவனம் கடனை வழங்குகிறது.

மறைத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து டொலர்களையும் மீண்டும் வெளியில் கொண்டு வர நேரிடும். இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்றுள்ள தொழிலாளர்கள் தமது டொலர்களை அனுப்புவதில்லை. இதன் காரணமாக நாட்டுக்கு கிடைக்க வேண்டிய டொலர்களில் 500 மில்லியன் டொலர் வரை குறைந்துள்ளது.

நாட்டின் நிதியில் காணப்படும் நிச்சயமற்ற நிலைமை இதற்கு காரணம். சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெறும் போது, அவர்களின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட வேண்டும். சீனா, இந்தியா போன்ற நாடுகளில் பெறப்படும் கடனை போன்று சர்வதேச நாணய நிதியத்திடம் பெறும் கடனை பயன்படுத்த முடியாது.

நிதியை வெளிப்படை தன்மையுடன் பயன்படுத்த வேண்டும். சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனில் தரகு பணம் பெற முடியாது. கடனை வழங்கிய பின்னர், நாணய நிதியம் முழுமையான கண்காணிப்பை மேற்கொள்ளும். எனினும் அரசாங்கம் குறுகிய கால இலாபங்களுக்காக முற்றாக திரிபுப்பட்ட பொருளாதார கொள்கையை அரசாங்கம் பின்பற்றுவதை காண முடிகிறது” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024