சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் ஆபத்தான நோய் கண்டுபிடிப்பு
Sri Lanka
China
Sri Lanka Customs
By Sumithiran
சீனாவிலிருந்து அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை இறைச்சியில் ஆபத்தான நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இறைச்சியில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் என்ற நோய் நிலைமை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கம் எடுத்த உடன் நடவடிக்கை
இதனையடுத்து இறைச்சி தொகையை அழிப்பதற்கு இலங்கை சுங்கம் இன்று காலை நடவடிக்கை எடுத்திருந்தது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிகள்
பன்றி இறைச்சி, சொசேஜஸ் மற்றும் வாத்து இறைச்சி என்பனவே சீனாவில் இருந்து இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
எனினும், இறக்குமதி செய்யப்பட்ட குறித்த இறைச்சி தொகை, சந்தைக்கு விடுவிக்கப்படவில்லை என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமாலி கொதலாவல தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி