பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தசுன் ஷானகவிற்கு விதிக்கப்பட்டது தடை!
இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தசுன் ஷானகவிற்கு, பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் விளையாடுவதற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எல் 2026 பருவத்திற்காக லாகூர் கலாண்டர்ஸ் அணியால் 75 இலட்சம் பாகிஸ்தான் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த அவர், அந்த ஒப்பந்தத்தை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தை மீறல்
இந்த ஆண்டு மார்ச் 21ஆம் திகதி பாகிஸ்தான் தொடரிலிருந்து திடீரென விலகிய ஷானக, அடுத்த நாளே இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரில் சாம் கர்ரனுக்குப் பதிலாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒப்பந்தமானார்.

இந்த விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்திய விசாரணையில், ஷானகவின் ஒருதலைப்பட்சமான விலகல் வீரர் பதிவு விதிமுறைகள் மற்றும் முத்தரப்பு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒப்பந்த சட்டத்திற்குப் புறம்பான காரணங்களுக்காக அவர் தொடரிலிருந்து விலகியதாக பாகிஸ்தான் வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |