ஹோர்முஸ் நீரிணையில் ரஷ்யாவிற்கு ஈரான் வழங்கிய அதிரடிச் சலுகை!
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி ஆகியோருக்கு இடையே முக்கியத் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தைப் பேணிக் காக்க வேண்டியதன் அவசியத்தை லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளார்.
போர்ச் சூழல்
போர்ச் சூழல் கட்டுப்பாட்டை மீறிச் செல்வதைத் தவிர்க்கவும் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டவும் தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ரஷ்யா சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனையின் போது ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ள போதிலும் ரஷ்யாவிற்குச் சாதகமான ஒரு முடிவை ஈரான் அறிவித்துள்ளது.

நீரிணை வழியாகச் செல்லும் ரஷ்யக் கப்பல்கள் மற்றும் சரக்குகள் எந்தவிதத் தடையுமின்றிப் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்யத் தாங்கள் தயாராக இருப்பதாக ஈரானியத் தரப்பு லாவ்ரோவிடம் உறுதியளித்துள்ளது.
அமெரிக்காவுடனான மோதல் உச்சகட்டத்தில் இருக்கும் வேளையில் தனது நட்பு நாடான ரஷ்யாவிற்கு ஈரான் இந்த விசேட சலுகையை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |