நெதர்லாந்திலிருந்து இலங்கையிலுள்ள தனது சொந்த தாயை தேடும் மகள்
இலங்கையிலுள்ள தாய் ஒருவர் நெதர்லாந்து தம்பதிக்கு தத்து கொடுக்கப்பட்ட நிலையில் அந்த பெண்பிள்ளை வளர்ந்து தற்போது தனது சொந்த தாயை தேடுகின்றது. தனது தாயை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
களுத்துறை மருத்துவமனையில் பிறப்பு
1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி களுத்துறை பொது மருத்துவமனையில் எண் 3570 கொண்ட இலங்கை பிறப்புச் சான்றிதழில் அவரது பெயர் அசோகா என பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது தாயார் பெயர் சேனநாயக்க முதியன்செலகே சாந்தனி என குறிப்பிடப்பட்டுள்ளது.
1985ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி களுத்துறை நகரப் பிரிவின் பிறப்பு அத்தாட்சி அலுவலர் எம். எச். செனரத்தினால் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டது. பிறப்பு பதிவுக்கான தாயாக 24 வயதான சேனநாயக்க முதியன்செலகே சாந்தனி அறிவிக்கப்பட்டார். மேலும் அவரது முகவரி கந்தகஹவில, பயாகல என வழங்கப்பட்டுள்ளது.
நிரந்தர முகவரி மாத்தறை
எனினும் அவரது நிரந்தர முகவரி மாத்தறை என வழங்கப்பட்டுள்ளது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியன்று இந்தக் குழந்தை, வெர்னா எலிசபெத் ஜோஸ்பினா பாடன் என்பவரால் நெதர்லாந்தைச் சேர்ந்த ஜேக்கபஸ் ஹெர்மன் மேரி பாடன் மற்றும் எலிசபெத் வில்ஹெல்மினா பாடன் ஆகியோரால் சட்டபூர்வமாக தத்தெடுக்கப்பட்டது.
கொழும்பு மாவட்ட நீதிபதி எச்.எஸ். அகலவத்தே கையொப்பமிட்ட 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியிட்ட உத்தரவிற்கமைய, குழந்தையை பெற்றுள்ளனர்.
தற்போது இந்த பெண் தனது சொந்த தாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எனவே இலங்கை தாயைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், தயவுசெய்து நெதர்லாந்து எண் +32474754341 அல்லது +94741120821 என்ற இலங்கை எண்ணில் அழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
