அரசியல் சக்தியின் பின்னணியில் பேராயர்! பகிரங்க குற்றச்சாட்டு
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வௌியிட்ட கருத்து தொடர்பில், மீள் பரிசீலனை செய்து பார்க்க வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
பேராயரின் கருத்திற்கு பின்னால் அரசியல் சக்தி ஒன்று இருப்பதாகவும் அதனை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
இதேவேளை கடந்த நாட்களில் விசாரணை ஆணைக்குழுவில் மைத்திரிபால சிறிசேனவின் பெயர் கூறப்பட்டுள்ளதாகவும் தாக்குதல் நடப்பதை அறிந்து வௌிநாடு சென்ற மைத்திரிபால சிறிசேன ஆடை அணிந்து கொண்டா கதைக்கிறார் எனவும் தேர்தலில் போட்டியிடுவதாக அவர் அறிவிப்பது வெட்கப்பட வேண்டியது எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கர்தினாலின் கருத்து கவலை அளிப்பதாக கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.