புலம்பெயர் தமிழர்களால் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் - தயாசிறி ஜெயசேகர ஆதங்கம்

speech parliament dayasri jeyasehara
By Vanan Jul 06, 2021 11:01 PM GMT
Report

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து செய்யும் பொய் பிரசாரங்கள் காரணமாக அந்தந்த நாடுகளில் வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்தார்.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக கூறும் பொய் பிரசாரங்களை நிறுத்த, அரசாங்கம் தலையிட்டு, முநையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும் எனவும் இராஜாங்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்த) சட்டமூலம், சித்திரவதை மற்றும் வேறு கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது கீழ்த்தரமாக நடத்துதல் அல்லது தண்டித்தல் என்பவற்றுக்கெதிரான சமவாயம் (திருத்தம்) சட்ட மூலம், குற்றவியல்நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஒரு கட்டளை மற்றும்காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களுக்கான சம்பளம் மற்றும்கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பு இங்கு கூறும் விடயங்களை புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இந்த காரணிகளை கையில் எடுத்துக்கொண்டு அதில் அவர்கள் எவ்வாறு வாழ்கின்றனர், பின்னர் எமக்கு எதிராக எவ்வாறு செயற்படுகின்றனர் என்பது குறித்து நாம் கவனம் செலுத்தாது உள்ளோம்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் மிகப்பெரிய இனப்படுகொலை இடம்பெற்றதாகவும், அதில் தமிழ் மக்களுக்கு பாரிய அழிவு ஏற்பட்டது, 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றெல்லாம் சர்வதேச புலம்பெயர் தமிழ் அமைப்புகள் பிரசாரம் செய்துகொண்டுள்ளது.

இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே அடித்தளம் போட்டு வருகின்றது. கூட்டமைப்பினர் இங்கு பேசுவதை கொண்டே பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்று இலட்சம் மக்கள் நெருக்கடி நிலையில் இருந்து இராணுவத்தினால் காப்பற்றப்பட்டனர். இந்த மூன்று இலட்சம் மக்களையும் கொன்று குவித்திருந்தால் இவர்கள் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் இராணுவம் இவர்களை காப்பாற்றியது.

இப்போது கனடாவில் இனப்படுகொலை வாரம் என அனுஷ்டிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் அடுத்த பரம்பரை தமிழ் மக்கள் இலங்கையில் அடக்குமுறை இடம்பெறுவதாக நினைப்பார்கள்.

எனவே இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் நிறுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டும். தமிழ் அமைப்புகளின் இந்த செயற்பாடுகள் காரணமாக அங்கு வாழும் சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் நிலையே உருவாகியுள்ளது.

இது கனடாவில் மட்டுமல்ல, தமிழ் புலம்பெயர் அமைப்புகள் இருக்கும் சகல இடங்களிலும் இவ்வாறான செயற்படுகள் இடம்பெற்றால் அங்கு வாழும் சிங்கள மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் நிலையொன்று உருவாகும். எனவே இதனை நிறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020