என்.பி.பி அரசுடன் டீல் : சஜித் அணி எதற்கும் அஞ்சாது என சூளுரை
“தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவ்வித அரசியல் டீலும் கிடையாது. எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பை நாம் சரியாக நிறைவேற்றிவருகின்றோம்.”- என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு மக்கள்
“இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு மக்கள் இன்று வந்துவிட்டனர். பிரதான எதிர்க்கட்சிக்குரிய பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி தம்மால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்துவருகின்றது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் உட்பட அனைத்து விடயங்களிலும் பொறுப்புடன் செயல்பட்டுள்ளோம்.
அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை
இந்த அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் இருப்பதால், நாடாளுமன்றத்தில் எண்ணிக்கை ரீதியில் சவால் கொடுப்பது கடினம்.

இணைந்து பயணிக்ககூடிய விடயங்களில் அனைத்து எதிரணிகளுடனும் நாம் ஒன்றிணைந்து பணியாற்றிவருகின்றோம். அதற்காக தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை.
இந்த இந்த அரசாங்கத்துக்கு அஞ்சவில்லை. அரசாங்கத்துடன் எங்களுக்கு எந்தவித டீலும் இல்லை. பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் எமது பொறுப்பை சரிவர நிறைவேற்றுவோம். ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணையும்.” – என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |