அநுர அரசிற்கு எதிராக கொழும்பில் வெடித்த போராட்டம்!
நாட்டில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் அரசாங்கம் விதித்துள்ள வரிகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு - பொரளை கெம்பல் மைதான வளாகத்தில் இருந்து இன்று (03) நண்பகல் வேளையில் ஆரம்பமான இந்தப் பேரணி, கோட்டைப் பகுதியை நோக்கி நகர்ந்து செல்கின்றது.
"அநியாய வரிகளை நீக்கு! வாழ்க்கைச் சுமையைக் குறைத்திடு!" எனும் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் போராட்ட இயக்கத்தினால் இந்தக் கண்டனப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடுமையான போக்குவரத்து நெரிசல்
இப்போராட்டத்தில் முன்னணி சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட முன்னணி, சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம், தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் உள்ளிட்ட பல வெகுஜன அமைப்புகளும் சிவில் சமூகக் கூட்டமைப்புகளும் பங்கேற்றிருந்தன.

இதேவேளை எதிர்ப்புப் பேரணி காரணமாக பொரளை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு கோட்டையை நோக்கி இந்தப் பேரணி நகர்ந்து வருவதால், பொரளையைச் சூழவுள்ள பிரதான வீதிகளில் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
