பட்டம் விடும் போது கூரை உடைந்து விழுந்ததில் சிறுவன் உட்பட மூவர் மரணம்!
sri lanka
death
people
galle
By Shalini
காலி − மக்குலுவ பகுதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றின் மேல் கூரையில் ஏறி பட்டம் விட முயற்சித்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த வீட்டின் கூரை உடைந்து வீழ்ந்ததில் இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது 46 வயதுடைய வீட்டு உரிமையாளர் அவரது மகனான 6 வயது சிறுவன் மற்றும் அயல்வீட்டுக்காரரான 44 வயதுடையவரே உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்