தற்கொலை செய்துகொண்ட இராணுவ சிப்பாய்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
srilanka
death
army
By Vasanth
இராணுவ சிப்பாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருகையில், கொஸ்கம இராணுவ முகாமில் இணைத்துக் கொள்ளப்பட்ட இவர் குறித்த முகாமினுள் வைத்து தனது கடமைக்கு பயன்படுத்தும் துப்பாக்கியைப் பிரயோகித்து இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
உயிாிழந்த இராணுவ உத்தியோகத்தர் 19 வயதுடைய மொரவக்க - களுபோவிட்டியன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தற்கொலை செய்துகொண்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி