இளம் குடும்பஸ்தருக்கு எமனாக மாறிய ஊஞ்சல்
sri lanka
death
people
puttala
By Shalini
வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சல் வயரில் கழுத்து இறுகி இரண்டு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவம் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி வேலுசுமனபுர பிரதேசத்தில் இடம்பெற்றதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏ.சஞ்ஜீவ சம்பத் (வயது 27) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு இச்சம்பவத்தில் உயிரிழந்தவராவார். வீட்டுக்கு அருகில் உள்ள மரத்தில் வயரைக் கொண்டு சேலையினால்,
இந்த ஊஞ்சல் கட்டப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஊஞ்சலில் அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த போது, ஊஞ்சலில் கட்டப்பட்டிருந்த வயர் கழுத்தில் இறுகியே இந்நபர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்