திட்வா சூறாவளியில் பலியான உயிர்களின் இறப்பு சான்றிதழ் தொடர்பில் வெளியான தகவல்
"திட்வா" சூறாவளியால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 80% பேருக்கு பதிவாளர் நாயக திணைக்களம் இறப்பு சான்றிதழ்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 519 பாதிக்கப்பட்டவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அடையாளம் காணப்பட்ட மேலும் 92 உயிரிழந்த நபர்களுக்கு சான்றிதழ்களை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றதாகவும் கூறப்படுகிறது.
பேரிடர் மேலாண்மை மையத்திலிருந்து (DMC) பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பேரிடரைத் தொடர்ந்து 611 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜல்தீபன் தெரிவித்துள்ளார்.
சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு
நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக தற்போது காணாமல் போனதாகக் கூறப்படும் 164 பேரில், 92 நபர்களின் பெயர்கள் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த பிரதேச செயலக அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த 2 ஆம் திகதி அரசு வெளியிட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் கீழ், திடீர் பேரிடர்கள் காரணமாக காணாமல் போனவர்கள் குறித்து குறிப்பிட்ட காலத்திற்குள் எந்த தகவலும் கிடைக்காவிட்டால், அவர்களுக்கு இறப்பு பதிவு சான்றிதழ்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பேரிடரால் பாதிக்கப்பட்ட காணாமல் போன நபர் குறித்து எந்த ஆட்சேபனையும் இல்லை என்றால், பதிவாளர் நாயகத்தால் அங்கீகரிக்கப்பட்ட, சம்பந்தப்பட்ட பிராந்திய பிரதி அல்லது உதவி பதிவாளர் நாயகத்தின் ஒப்புதலுடன், பதிவாளர் நாயகத்தால், பிரதேச செயலாளர் மூலம் இறப்பு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 4 மணி நேரம் முன்