கொவிட் பலி 544 ஆக அதிகரித்தது
srilanka
covid-19
death
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 544 ஆக அதிகரித்துள்ளது.
பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும், சுதுஹும்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 79 வயதுடைய பெண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய பெண் ஒருவரும், புறக்கோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 96 வயதுடைய பெண் ஒருவரும், கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் சிலாவதுர பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.