தமிழகத்தில் சிறையிலிருந்து விடுவிக்க கோரி போராட்டம் நடத்திய இலங்கை தமிழர் உயிரிழப்பு
srilanka
prison
death
tamilnadu
By Sumithiran
தமிழகம் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இலங்கைத்தமிழர்களில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பைச் சேர்ந்த 52 வயதான நபர் என தெரியவருகிறது.
இவருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளிட்ட சுமார் நூறு பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தம்மை விடுவிக்கக் கோரி இவர்கள் தொடர்ச்சியாக 16 நாட்களாக சாத்வீகப் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி